Lk Live Studio

⚰ மரண அறிவித்தல்
🪔
15,01,2026
🪔

திரு. யோகராசா பாலகுமார்

(பிரதி அதிபர் – கொழும்பு விபுலானந்தா கல்லூரி)
இடைக்காடு, அச்சுவேலி, srilanka
கொட்டாஞ்சேனை, srilanka

யாழ். சந்நிதி வீதி, இடைக்காடு, அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யோகராசா பாலகுமார் அவர்கள் 15-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், யோகராசா (ஓய்வுபெற்ற கணக்காளர்) – சத்தியேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற தம்பிஐயா – கலாவதி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

திருமகள் (ஆசிரியை – கள. புனித அன்னம்மாள் மகளிர் மகா வித்தியாலயம், வத்தளை) அவர்களின் பாசமிகு கணவரும்,

அக்‌ஷயா அவர்களின் (கொழும்பு சைவ மங்கையர் கழகம்) பாசமான தந்தையும்,

பாலகணேஸ் (அப்பு – கனடா), பாலசதிஸ் (முரளி – கனடா) ஆகியோரின் பாசமிக சகோரதரும்,

ஞானேஸ்வரி, யோகேஸ்வரி (கனடா), கனகசபை ஆகியோரின் பெறாமகனும்,

செல்வ ஈஸ்வரன் (கனடா), நடராசா அன்னம்பிள்ளை, கந்தையா, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,

சங்கீதா (கனடா), தமிழேந்தி (கொழு. புனித அந்தோனி தமிழ் மத்திய வித்தியாலயம், கொழும்பு- 14), றமேஸ் (சுவிஸ்), சுரேஸ் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கண்ணன் (கொழும்பு) அவர்களின் அன்பு சகலனும்,

வசந்தி (சுவிஸ்), தர்சினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-01-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் இடைக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

கண்ணன்:- +94 70 755 8275
பிரதாபன்:- +94 77 521 2736

⚰ மரண அறிவித்தல்

📝

Summary

👣

இடைக்காடு, அச்சுவேலி, srilanka

📍

கொட்டாஞ்சேனை, srilanka

🙏

🛕 Hindu

🖼️

Photos