Lk Live Studio

⚰ மரண அறிவித்தல்
01,11,1938
🪔
14,01,2026
🪔

திரு. கிருட்டினர் சிவமணி

(ஓய்வுபெற்ற அதிபர் – யாழ். காரைநகர் மெய்கண்டான் வித்தியாலயம்)
யாழ். காரைநகர், srilanka
யாழ். கொக்குவில், srilanka

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாவும் கொண்ட திரு. கிருட்டினர் சிவமணி அவர்கள் 14-01-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – சிவதேவி தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, சிவபாக்கியம், மகேந்திரம், நேசநாயகி மற்றும் திலகவதி, சின்னத்துரை ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்ற கமலேஸ்வரன், சுகன்யா ஆகியோரின் மைத்துனரும்,

சிவகலா (பின்லாந்து) ஜெயக்குமார், விஜயகுமார், சசிகலா, சித்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரஞ்சன், கேதீஸ்வரன், விஜிகாந்தன், தர்மினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சஞ்ஜீவன், சஜீவன், கம்சா, அஷ்சயன், அபிமாதவன், சரண், டிரக்‌ஷா, தக்சன் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-01-2026 வௌ்ளிக்கிழமை அன்று இல-40/18, நடராஜர் வீதி, கொக்குவில் மேற்கில் அமைந்துள்ள அன்னாரது மகள் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 577 4161
+94 77 725 0914

⚰ மரண அறிவித்தல்

📝

Summary

👣

யாழ். காரைநகர், srilanka

📍

யாழ். கொக்குவில், srilanka

🙏

🛕 Hindu

🖼️

Photos