யாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தயாபரராசா சாரதாதேவி அவர்கள் 14-01-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா (கிளாக்கர்) – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தயாபரராசா அவர்களின் அன்பு மனைவியும்,
தயாளினி (சுவிஸ்), தர்சினி (சுவிஸ்), காலஞ்சென்ற கிருபானந்தி (தனுஷா), பகீரதன் (இலண்டன்) ஆகியோரின் அருமை தாயாரும்,
அருள்செல்வம், சிவகுமார், ஆனந்தகௌரி ஆகியோரின் அருமை மாமியாரும்,
நிஜானா, நிஜந்தன், சீமோன், சமீனா, சனாதனி, திரிவேதிகா, ஜோதீஸ்வர் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, சண்முகநாதன், இராமேஸ்வரன், சச்சிதானந்தம், சாம்பசிவம், கேதாரகௌரி, மற்றும் தனபாலதேவி, காலஞ்சென்றவர்களான சோதிமலர், சுகந்தமலர், சந்திரவதனா ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராசரட்ணம், பத்துமாவதி, கந்தையா, சிவஞானசேகரம், மற்றும் தனபாலசந்திரன், காலஞ்சென்றவர்களான மனோகரன், தங்கமுத்து, பாலசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 76 309 3775


