Lk Live Studio

⚰ மரண அறிவித்தல்
13-01-1943
🪔
12-01-2026
🪔

திரு கந்தையா நடராசா

(அச்சுவேலி கூட்டுறவுச் சங்க முன்னாள் முகாமையாளர்)
ஆவரங்கால், srilanka
புன்னாலைக்கட்டுவன், srilanka

ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் புன்னாலைக்கட்டுவன் தெற்கை வசிப்பிட மாகவும் அச்சுவேலி கூட்டுறவுச் சங்க முன்னாள் முகாமையாளருமான கந்தையா நடராசா அவர்கள் நேற்று (12.01.2026) திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.


அன்னார் காலஞ்சென்ற கந்தையா – சின்னாச்சி தம்பதியரின் அன்பு மகனும், நடராசா இராசராணியின் அன்புக் கணவரும்,

மகாலிங்கம் (ஜேர்மனி), கோபாலகிருஷ்ணன் (டென்மார்க்), காலஞ்சென்றவர்களான கமலாதேவி, பரிமளாதேவி, வகிந்தநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற வர்களான இராமசாமி, சரஸ்வதி, நவரத்தினம், சந்திரதேவன் மற்றும் தருமதுரை சரோஜினிதேவி ஆகியோரின் மைத்துனரும்,

சிறீகரன் (பிரான்ஸ்), சிறீதரன் (பின்லாந்), சிறீரஞ்சினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லாவண்யா, வனிதா, நவேந்திரலிங்கம் ஆகியோரின் மாமனாரும்,

அஸ்வின், ஆதர்ஷா, ஜெய்ஷா, மாதுஜா, ஆருஷன், அபிஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (14.01.2025) புதன்கிழமை காலை 9.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக் காக புன்னாலைக்கட்டுவன் விலங்கன் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப் படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு தயவுடன் கேட்டு கொள்கிறோம்.


தகவல்: குடும்பத்தினர்.
077 40 23 386

⚰ மரண அறிவித்தல்
13-01-1943

📝

Summary

👣

ஆவரங்கால், srilanka

📍

புன்னாலைக்கட்டுவன், srilanka

🙏

🛕 Hindu

🖼️

Photos